Showing posts with label பெண் தெய்வங்கள். Show all posts
Showing posts with label பெண் தெய்வங்கள். Show all posts

Sunday, December 19, 2010

திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். 1

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 2

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். 3

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்*
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்*
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 4

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 5

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்*
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?*
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 6

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து*
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!*
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து*
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்*
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?*
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?*
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய். 7

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு*
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்*
வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்*
கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய். 8

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்*
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்*
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?*
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். 9

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்*
நாற்றத் துழாய்முடி நாராயணன்* நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்* பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்*
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?*
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 10

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து*
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்*
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!*
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்*
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து *நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட *
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி!*நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 11

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*
நினைத்து முலை வழியே நின்று பால்சோர*
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்*
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்*
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற*
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்*
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!*
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். 12

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!*
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்*
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். 13

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்*
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்*
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்*
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்*
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!*
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். 14

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?*
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்*
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக*
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை*
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 15

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே!* கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே!* மணிக்கதவம் தாள்திறவாய்*
ஆயர் சிறுமியரோமுக்கு* அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்*
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்*
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!*நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். 16

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்*
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!*
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்*
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த*
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்*
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!*
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். 17

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்*
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!*
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்*
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண்*மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்*
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்*
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 18

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்*
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்*
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்*
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்*
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை*
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்*
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்*
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். 19

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று*
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்*
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு*
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்*
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்*
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை*
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். 20

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப*
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்*
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்*
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்*
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்*
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே*
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். 21

அங்கண்மா ஞாலத்து அரசர்* அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே*
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே*
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?*
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்*
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். 22

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து*
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீபூவைப்பூ வண்ணா!* உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக்* கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 23

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி*
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி*
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி*
வென்றுபகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி*
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்*
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். 24

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்*
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*
தரிக்கிலான் ஆகித் தான்தீங்கு நினைந்த*
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!* உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 25

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். 26

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 27

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து* உந்தன்னைப்
பிறவி பெறுந்துதனைப் புண்ணியம் யாம்உடையோம்*
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!* உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீதாராய் பறையேலோர் எம்பாவாய். 28

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து*உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து*நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!*
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்* உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்*
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். 29

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை*
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி*
அங்கப்பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்*
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதைசொன்ன*
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 30

ஆண்டாள் திருவடிகளே சரணம்

Wednesday, July 14, 2010

நானொரு விளையாட்டு பொம்மையா

நானொரு விளையாட்டு பொம்மையா
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு

நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு

(நானொரு)

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு

Tuesday, July 13, 2010

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா
பாடவந்தோமம்மா பாடவந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ - இங்கு
வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

(மாணிக்க)

நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

(மாணிக்க)

வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே

வாணி சரஸ்வதி மாதவி பார்கவி
வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கினிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி

Wednesday, May 16, 2007

தேவி கருமாரியம்மன்

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.

புவனமுழுதாளுகின்ற புவனேச்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேச்வரி
நவநவமாய் வடிவாகும் மகேச்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேச்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீச்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீச்வரி
உவமானப்பரம்பொருளே ஜகதீச்வரி
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கொஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவனின் குரல்கேட்டுன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத்தினம் வழியனுப்பு

கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாஉனையே பாடவேண்டும்
பக்தியொடு கையுனையே கூடவேண்டும்
என்ணமெலாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்
மன்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகளுடைய குறைகளையும் தீருமம்மா

நெற்றியுலும் குங்குமமே நிறையவேண்டும்
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றமெல்லாம்நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா ?
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா ?

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ?
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையன்றிக் காவலுண்டோ?
கன்றுக்குப் பசுவன்றிச் சொந்தமுண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ ?
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ?

அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என்காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்
வஞ்சத்தை என்னெஞ்சம் அறுக்கவேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்
என்னோடு நீயென்றும் வாழவேண்டும்

கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவழ வாயழகி உன்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.

திருவிளக்கு

விளக்கே... திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே!
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே !
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க!
மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
மாங்கலயப் பிச்சை மடிப் பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா !
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லும் அம்மா!
அல்லும் பகலும் அண்டையில் நில்லும் அம்மா!

சேவித்தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக்கிரீடங் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைக் கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூடக்கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறைப்போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதக வென ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனம் குளிர கண்டு கொண்டேன்

அன்னையே அருந்துணையே அருகிருந்து காத்திடுவாய்
வந்த வினையகற்றி மகாபாக்யம் தந்திடுவாய்
தாயாரே உந்தன் தாளடியில் சரணம் என்றே
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்
குடும்பக் கொடிவிளக்கே! குற்றங்கள் பொறுத்திடுவாய்!
குறைகள் தீர்த்திடுவாய்! குடும்பத்தைக் காத்திடுவாய்!
தந்தையும் தாயும் நீயே தயவுடனே ரட்சிப்பாய்!
கருணைக்கடல் நீயே கற்பகவல்லி நீயே!
சகலகலா வல்லி தாயே ரட்சிப்பாய்!
தஞ்சம் உனையடைந்தேன்! துக்கமெல்லாம் போக்கிடுவாய்!
அபிராமவல்லி அம்மா! அடைக்கலம் நீயே அம்மா!

திருவிளக்கு 108 போற்றி

பிள்ளையார் துதி

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புத்தியில் வைத்துப் போற்றுகின்றேனே
--
பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முற்றறி வொளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகும் நிறைந்திருப்பாய் போற்றி
வரம்பி லின்பமாய் வளர்ந்திருப்பாய் போற்றி
இயற்கையாய் அறிவொளி யானாய் போற்றி
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
பிறர் வயமாகா பெரியோய் போற்றி
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
பேரருட் கடலாம் பொருளே போற்றி (10)

முடிவி லாற்றல் உடையாய் போற்றி
மூவுல குந்தொழ மூத்தோய் போற்றி
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள் கெடுத்து இன்பமருள் எந்தாய் போற்றி
மங்கள நாயகி மாமணி போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
அறம் வளர் நாயகி யம்மையே போற்றி
மின்னொளி யம்மையாம் விளக்கே போற்றி (20)

மண்ஒளி பிழம்பாய் வளர்த்தாய் போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
சூடாமணியே சுடரொளி போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
இல்லக விளக்காம் இறைவி போற்றி (30)

சுடரே விளக்காம் தூயாய் போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதீ போற்றி
தூண்டு சுடரனைய சோதீ போற்றி
ஓதும் உள் ஓளி விளக்கே போற்றி
இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லக விளக்காம் சோதியே போற்றி
பலர்காண் பல்லக விளக்கே போற்றி (40)

நல்லக நமச்சிவாய விளக்கே போற்ர்றி
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வு சூழ்கடந்தோர் விளக்கே போற்றி8
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
உள்ளத் தகளி விளக்கே போற்றி
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திருமயக்கு விளக்கே போற்றி
இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி (50)

அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
கற்பனை கடந்த சோதியே போற்றி
கருணையே உருவாம் விளக்கே போற்றி
அற்புதக் கோல விளக்கே போற்றி
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்பர வியோம விளக்கே போற்றி
பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி (60)

கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருகு அருள் சுமக்கும் பெரும போற்றி
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
அருவே உருவே அருவுருவே போற்றி
நந்தா விளக்கே நாயகி போற்றி
செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
தீபமங்கள சோதி விளக்கே போற்றி
மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
பாகம் பிரியா பராபரை போற்றி (70)

ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா அடியேன் போற்றி
ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
அந்தமிலா இன்பம் அருள்வோய் போற்றி
முந்தை வினையோய் முடிப்போய் போற்றி
பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி (80)

இருநில மக்கள் இறைவி போற்றி
குருவென ஞானங் கொடுப்போய் போற்றி
ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
அஞ்சேலென் றருளும் அன்பே போற்றி
தஞ்சமென் றவரைச் சார்வோர் போற்றி
ஓதுவோம் அகத்துறை ஒளியே போற்றி
ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி (90)

எல்லா வுலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
பூங்குழல் விளக்கே போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் போற்றி (100)

நலம் எல்லாம் உயிர்க்கு நல்குக போற்றி
தாயே நின்னருள் தந்தாய் போற்றி
தூயநின் திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
போற்றி என் அன்பொளி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

திருவிளக்கு பூஜை

சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே
சுரி குழல் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால கொள் வெண் நீற்றாய்
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே செலவத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே !
ஓம் எனும் சிற்பரத்தாளே
அபாயமறுக்கும் அறுகோணத்தி
சொற்பவத்தி சூக்ஷ்மரூபி
சரணம் சரணம் தாள் பணிந்தேனுனை
பாவம் பொறுத்துப் பல பவுசுந்தான் கொடுத்து
விக்கினங்கள் வாராமல் வேலிபோல் காத்து
ஆதரித்தெனக்கு அருள் புரிவாயே
புவனசுந்தரி போற்றி வணக்கம்
குருவடியாய் வந்து உபதேசங்கள்
கொடுத்துன் திருவடி தந்தருள்வாயே

Monday, April 16, 2007

கலையாத கல்வியும் குறையாத வயதும்

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!