Wednesday, May 16, 2007

திருவிளக்கு பூஜை

சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே
சுரி குழல் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால கொள் வெண் நீற்றாய்
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே செலவத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே !
ஓம் எனும் சிற்பரத்தாளே
அபாயமறுக்கும் அறுகோணத்தி
சொற்பவத்தி சூக்ஷ்மரூபி
சரணம் சரணம் தாள் பணிந்தேனுனை
பாவம் பொறுத்துப் பல பவுசுந்தான் கொடுத்து
விக்கினங்கள் வாராமல் வேலிபோல் காத்து
ஆதரித்தெனக்கு அருள் புரிவாயே
புவனசுந்தரி போற்றி வணக்கம்
குருவடியாய் வந்து உபதேசங்கள்
கொடுத்துன் திருவடி தந்தருள்வாயே

1 comment:

hema said...

சீல திருவிளக்கே சீதேவி லட்சுமியே கோல திருவிளக்கே - we need this song