Wednesday, May 16, 2007

திருவிளக்கு 108 போற்றி

பிள்ளையார் துதி

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புத்தியில் வைத்துப் போற்றுகின்றேனே
--
பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முற்றறி வொளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகும் நிறைந்திருப்பாய் போற்றி
வரம்பி லின்பமாய் வளர்ந்திருப்பாய் போற்றி
இயற்கையாய் அறிவொளி யானாய் போற்றி
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
பிறர் வயமாகா பெரியோய் போற்றி
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
பேரருட் கடலாம் பொருளே போற்றி (10)

முடிவி லாற்றல் உடையாய் போற்றி
மூவுல குந்தொழ மூத்தோய் போற்றி
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள் கெடுத்து இன்பமருள் எந்தாய் போற்றி
மங்கள நாயகி மாமணி போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
அறம் வளர் நாயகி யம்மையே போற்றி
மின்னொளி யம்மையாம் விளக்கே போற்றி (20)

மண்ஒளி பிழம்பாய் வளர்த்தாய் போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
சூடாமணியே சுடரொளி போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
இல்லக விளக்காம் இறைவி போற்றி (30)

சுடரே விளக்காம் தூயாய் போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதீ போற்றி
தூண்டு சுடரனைய சோதீ போற்றி
ஓதும் உள் ஓளி விளக்கே போற்றி
இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லக விளக்காம் சோதியே போற்றி
பலர்காண் பல்லக விளக்கே போற்றி (40)

நல்லக நமச்சிவாய விளக்கே போற்ர்றி
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வு சூழ்கடந்தோர் விளக்கே போற்றி8
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
உள்ளத் தகளி விளக்கே போற்றி
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திருமயக்கு விளக்கே போற்றி
இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி (50)

அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
கற்பனை கடந்த சோதியே போற்றி
கருணையே உருவாம் விளக்கே போற்றி
அற்புதக் கோல விளக்கே போற்றி
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்பர வியோம விளக்கே போற்றி
பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி (60)

கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருகு அருள் சுமக்கும் பெரும போற்றி
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
அருவே உருவே அருவுருவே போற்றி
நந்தா விளக்கே நாயகி போற்றி
செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
தீபமங்கள சோதி விளக்கே போற்றி
மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
பாகம் பிரியா பராபரை போற்றி (70)

ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா அடியேன் போற்றி
ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
அந்தமிலா இன்பம் அருள்வோய் போற்றி
முந்தை வினையோய் முடிப்போய் போற்றி
பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி (80)

இருநில மக்கள் இறைவி போற்றி
குருவென ஞானங் கொடுப்போய் போற்றி
ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
அஞ்சேலென் றருளும் அன்பே போற்றி
தஞ்சமென் றவரைச் சார்வோர் போற்றி
ஓதுவோம் அகத்துறை ஒளியே போற்றி
ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி (90)

எல்லா வுலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
பூங்குழல் விளக்கே போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் போற்றி (100)

நலம் எல்லாம் உயிர்க்கு நல்குக போற்றி
தாயே நின்னருள் தந்தாய் போற்றி
தூயநின் திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
போற்றி என் அன்பொளி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

No comments: