Saturday, July 10, 2010

முருகனின் மறுபெயர் அழகு

முருகனின் மறுபெயர் அழகு - அந்த
முறுவலில் மயங்குது உலகு

(முருகனின்)

குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச்சொல்லிப் பழகு

(முருகனின்)

வேதங்கள் கூறிடும் ஒளியே - உயர்
வேலோடு விளையாடும் எழிலே
துறவியும் விரும்பிய துறவே - நீ
துறவியாய் நின்றிட்ட திருவே

No comments: