Friday, July 9, 2010

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ

(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ

(கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

4 comments:

hema said...

சீல திருவிளக்கே சீதேவி லட்சுமியே கோல திருவிளக்கே கும்பிட்டேன் நின்
அடியை
தில்லைவன நாதனும் சிவகாமி அம்மையும் சிந்தையில் கொண்டிருக்க செய்தவினை நீங்கிவிடு.................................................................................................
தொட்டிலுக்கு பிள்ளையும் தெழுவுக்குபால் பசுவும் பட்டறைக்கு நெல்லும் பதித்த மரக்காலும் ..........................

ஆ.உமாசங்கர் said...

சீலத் திருவிளக்கே ஸ்ரீ தேவி லக்ஷ்மியே
கோலத் திரு விளக்கே கும்பிட்டேன் நின் அடியை
தில்லை வன நாதனும் சிவகாமி அம்மையும்
சிந்தையிற் கொண்டிருக்க செய்த வினை நீங்கி விடும்
தந்தை தமர்தாய் சார்ந்த குரு அரசும் சிந்தை
மகிழ் வாழ்வை தேவியே தந்தருள்வாய்
தொட்டிலுக்கு பிள்ளையும் தொழுவுக்கு பால் பசுவும்
பட்டறைக்கு நெல்லும் பதித்த மரக்காலும்
உனக்கெரிக்க எண்ணையும் எனக்குண்ண சோறும்
தட்டாமல் தாயே தந்தருள்வாய் தகவுறவே!!!

hema said...

உமாசங்கர் சார், மிக மிக நன்றி நன்றி... நன்றி.. நன்றி!!!
மகிழ்ச்சியாயும் நெகிழ்ச்சியாயும் சொல்லி கொள்கிறேன் எனது நிண்ட நாட்கள் தேடலை கண்டு பிடித்து கொடுத்தமைக்கு.