Tuesday, July 8, 2008

கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)

5 comments:

hema said...

we need this song சீல திருவிளக்கே சீதேவி லட்சுமியே கோல திருவிளக்கே

ஆ.உமாசங்கர் said...

Hema, இந்த பாடலை முயற்சி செய்தீர்களா?
http://tamilpaamaalai.blogspot.com/2007/05/11.html

ஆ.உமாசங்கர் said...

ஹேமா, இன்னும் சில வரிகள் கொடுத்தால், என்ன பாடல் என்று யூகிக்க முடியும்.

hema said...

சீல திருவிளக்கே சீதேவி லட்சுமியே கோல திருவிளக்கே கும்பிட்டேன் நின்
அடியை
தில்லைவன நாதனும் சிவகாமி அம்மையும் சிந்தையில் கொண்டிருக்க செய்தவினை நீங்கிவிடு.................................................................................................
தொட்டிலுக்கு பிள்ளையும் தெழுவுக்குபால் பசுவும் பட்டறைக்கு நெல்லும் பதித்த மரக்காலும் ..........................

ஆ.உமாசங்கர் said...

திரு விளக்கு துதி

சீலத் திருவிளக்கே ஸ்ரீ தேவி லக்ஷ்மியே
கோலத் திரு விளக்கே கும்பிட்டேன் நின் அடியை
தில்லை வன நாதனும் சிவகாமி அம்மையும்
சிந்தையிற் கொண்டிருக்க செய்த வினை நீங்கி விடும்
தந்தை தமர்தாய் சார்ந்த குரு அரசும் சிந்தை
மகிழ் வாழ்வை தேவியே தந்தருள்வாய்
தொட்டிலுக்கு பிள்ளையும் தொழுவுக்கு பால் பசுவும்
பட்டறைக்கு நெல்லும் பதித்த மரக்காலும்
உனக்கெரிக்க எண்ணையும் எனக்குண்ண சோறும்
தட்டாமல் தாயே தந்தருள்வாய் தகவுறவே!!!