Friday, June 1, 2007

மலை என்று சொன்னாலே திருமலை

மலை என்று சொன்னாலே திருமலை
தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை
இரவென்றும் பகல் என்றும் இங்கொன்றும் இல்லை -எங்கள்
திருமலை வாசலுக்கு ஓய்வென்றும் இல்லை

மலை என்று சொன்னாலே திருமலை
தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை

என்றென்றும் திருவிழா கோலம்
ஏழு மலையானின் சன்னிதியில் வண்ணமிகு கோலம்
கன்றாகி பக்தர்கள் ஒடிவரும் நேரம்
தாயாகி வேங்கடவன் மாறிடுவான் நாளும்

மலை என்று சொன்னாலே திருமலை
தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை

மலை போல குவிகின்ற காணிக்கை
எண்ண மாளாது பெருகிடுமே எண்ணிக்கை
பொய்யாகிப் போகாது நம்பிக்கை
என சொல்லாமல் சொல்லிடும் கோவிந்தன் செய்கை

மலை என்று சொன்னாலே திருமலை
தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை

கோவிந்தா என்னும் ஒரு கோஷம்
அது வைகுண்டம் வரை சென்று மோதும்
நாலாயிரம் என்னும் திவ்ய ப்ரபந்தம்
நூறாயிரம் செவிகள் பருகும் நல் அமுதம்

மலை என்று சொன்னாலே திருமலை
தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை

முடி சுமந்த மன்னனிடம் அடியளந்த பெருமாளெ
படியளந்து கொட்டுகிறான் இங்கே
குபேரன் மடி சுமந்து வாங்குவதும் இங்கே
பிடி அவலை பெற்ற இடம் துவாரகை
தன் பெருங்கடனை தீர்க்கும் இடம் திருமாமலை

மலை என்று சொன்னாலே திருமலை
தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை
இரவென்றும் பகல் என்றும் இங்கொன்றும் இல்லை -எங்கள்
திருமலை வாசலுக்கு ஓய்வென்றும் இல்லை
மலை என்று சொன்னாலே திருமலை திருமலை திருமலை

2 comments:

Ramesh Kulandaivelu said...

அருமையான பாடல். நான் தேடியதும் கிடைத்தது. உங்களுக்கு நன்றி.

Unknown said...

Excellent song I like very much