Thursday, August 14, 2008

கணபதியே வருவாய் அருள்வாய்

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் நான் இசைபாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீர் என்றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)

2 comments:

hema said...

சீல திருவிளக்கே சீதேவி லட்சுமியே கோல திருவிளக்கே கும்பிடேன் நின் அடியை
தில்லைவன நாதனும் சிவகாமி அம்மையும்

hema said...

thank you for your reply i saw somewhere two month back in the song

சீல திருவிளக்கே சீதேவி லட்சுமியே கோல திருவிளக்கே கும்பிடேன் நின் அடியை
தில்லைவன நாதனும் சிவகாமி அம்மையும்