Friday, June 1, 2007

ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபாதமே சரணம்

ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்..சரணம்

அவதாரம் பத்திலும் அழகான தத்துவம்
அதுதானே ஆதாரம் எந்நாளும் சத்தியம்
ஆழ்வார்கள் பாசுரம் ஆனந்த சாகரம்
பெருமாளின் கோபுரம் வைகுண்ட தரிசனம்

வேதங்கள் நாலுமவன் அங்கங்களாகும்
சித்தாந்தமென்னும் அருள் தங்கங்களாகும்
வைணத்தை சொல்லும் அவன் திவ்ய நாமம்
அதை சொல்லத்தானே ஸ்ரீ விஷ்வ ரூபம்

தேவாதி தேவர்கள் தினம் பாடும் சீடன்
அதைக்கேட்டு எழுவானே ஸ்ரீ பத்மநாபன்
கீதோபதேசம் செய்தானே கிருஷ்ணன்
இங்கேயும் அர்ச்சுனன் வருவானா கண்ணன்

ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்..சரணம்

2 comments:

sury siva said...

உங்கள் பதிவுக்கு தற்செயலாக வந்தேன் என்று சொல்வதைக்காட்டிலும்
இன்று பாமோனா, ந்யூ யார்க்கில் இருக்கும் ரங்கனாதர் கோவிலுக்குப் போகலாமென்று
நினைத்துப் பின் அதை பின் ஒரு நாள் செல்லலாம் என்று முடிவும் செய்த வேளையின்
ஸ்ரீம ந் நாராயணனே என்னை இங்கு அழைத்து வந்தார் போல் தோன்றுகிறது.

சென்னையைச் சார்ந்த நான் இப்பொழுது கனெக்டிகெட்டில் ஒரு ஆறு மாதம் பயணமாக‌
வந்தேன். ஓய்வு பெற்ற எனது பொழுது போக்கு தமிழ்ப்பதிவுலகில் காணப்படும் பாடல்களுக்கு
கர்னாடக இசையில் மெட்டமைத்து அதை எனது யூ ட்யூபில் போடுவது. வணிக நோக்கு
எதுவுமில்லை. ஏற்கனவே பலரது பதிவுகளில் காணும் கவிதைகளுக்கு, பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறேன்.

நான் பாடகன் இல்லை எனினும் என்னால் இந்த வயதில் முடிந்த அளவுக்கு பாடுகிறேன்.
தங்கள் ஸ்ரீம ந் நாராயண எனும் பாடல் அதே பெளளி ராகத்தில் நன்றாக வருகிறது.

இன்னும் சிறிது நேரத்தில் அதை யூ ட்யூபிலும் எனது பதிவுகளில் ஏதோ ஒன்றிலும் போடுகிறேன்.
தங்கள் அனுமதி இல்லையேல் டெலிட் செய்து விடுவேன்.

சுப்பு ரத்தினம்.
ஸ்டாஃம்ஃபோர்டு, கனெக்டிகெட்
http://menakasury.blogspot.com
http://movieraghas.blogspot.com

Unknown said...

Need audio pls