கரும்புமுரல் கடிமலர்ப்பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலை போற்றி
கவுணியர்க்குப் பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை எடுத்தாண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்புமிள நகை போற்றி ஆரணது
புரஞ்சிலம்பும் அடிகள் போற்றி!
இயற்றியவர்: பரஞ்சோதி முனிவர்
No comments:
Post a Comment