Wednesday, May 16, 2007

தூபம் காட்ட...

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தூர் தலையிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேனடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறையும் மானே

இயற்றியவர்: அப்பர்

No comments: