Sunday, April 29, 2007

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசம் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உமாசங்கர்
மிகச் சிறந்த பணி...பல துதிப் பாடல்களையும் நீங்க ஒருங்கே தொகுப்பது....
அதிலும் அனுமன் பாடல்கள் அரிதான சேவை.

கண்ணன் பாட்டு
அம்மன் பாட்டு
முருகனருள்
என்று இம்மட்டில் தான் குழு வலைப்பூக்கள் உள்ளன.

நீங்க விருப்பப்பட்டால், கண்ணன் பாட்டு வலைப்பூவிற்கு அழைப்பு அனுப்பட்டுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க//
=
வேண்டியதை தந்திட வேங்கடேசம் நின்றிருக்க

ஆ.உமாசங்கர் said...

நன்றி ரவிசங்கர்,
பிழைத்திருத்தம் செய்துவிட்டேன்.
கண்ணன் பாட்டை படித்ததில் பிடித்த தொகுதியில் சேர்த்துள்ளேன்.

அன்புடன், ஆ.உமாசங்கர்