Monday, April 16, 2007

கலையாத கல்வியும் குறையாத வயதும்

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!

6 comments:

Unknown said...

கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
வாழ்க தமிழ்TT)

Unknown said...

கழு பிணியிலாத உடலும்

Unknown said...

தடைகள் வாராத கொடையும்

Anand Venkat said...

அது தொடையும் அல்ல. கொடையும்

Unknown said...

கலையாத கல்வியும் ஓர் கபடு வாராத நட்பும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் தடை வாராத கொடையும் கோணாத கோலும் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

Unknown said...

தமிழின் இனிமையை போற்றுவதற்கு ஒரு வார்த்தை உண்டோ (இருப்பவை போதாது)